தீண்டாமை உறுதிமொழி - மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள்
உறுதி மொழி - தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி - இந்தியாவின்
சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும்
வகையில் 30.01.2021 அன்று காலை 11.00 மணி முதல் 11.02 வரையில் இரண்டு
நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தீண்டாமை உறுதிமொழி
எடுத்துக்கொள்வது அறிவுரைகள் வரப்பெற்றது தொடர்பாக
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -30
ஆம் நாள் தியாகிகள் தினமாக ( Martyrs ' day ) கடைப்பிடிக்கப்பட்டும் ,
அன்றைய தினம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு "
இரண்டு நிமிடம் ( 11.00 A.M. to 11.02 . A.M ) மவுன அஞ்சலியும் " மற்றும் "
தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியும் ” எடுத்துக்கொள்ளப்பட்டு ,
வருகின்றது .
இந்நேர்வில் , உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் தியாகிகள்
தினமானது 30.01.2021 அன்று அரசு பொது விடுமுறையில் வருவதால் , அன்று
கடைபிடிக்கவேண்டிய இரண்டு நிமிட ( 11.00 A.M. to 11.02 . A.M ) மவுன
அஞ்சலியையும் , எடுக்கவேண்டிய " தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும்
உறுதிமொழியினையும் " 29.01.2021 அன்றைய தினம் கடைப்பிடிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது
தொடர்பான அறிக்கை மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை அன்றைய தினமே அனுப்பி
வைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .
தீண்டாமை உறுதிமொழி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் :
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தில் , ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -30 ஆம் நாள் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படும் , அன்றைய தினம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் ( 11.00 AM to 11.02 AM ) மவுன அஞ்சலியும் மற்றும் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றது .
இந்நேர்வில் , உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் தியாகிகள் தினமானது 30.01.2021 அன்று வருவதால் , அன்று கடைபிடிக்க வேண்டிய இரண்டு நிமிட ( 11.00 AM to 11.02 AM ) 3641501 அஞ்சலியையும் எடுக்க வேண்டிய தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியினையும் 29.01.2021 அன்றைய தினம் கடைபிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் 29.01.2021 அன்று ( 11.00 AM to 11.02 AM ) மவுன அஞ்சலி மற்றும் உறுதிமொழி எடுக்க மாவட்டக் கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . மேலும் உறுதிமொழி எடுத்துக்கொண்டமைக்கான அறிக்கையை அன்றைய தினம் பிப 1.00 மணிக்குள் அனுப்பி வைக்கவும் தெரிவிக்கப்படுகிறது .
தீண்டாமையை உறுதிமொழி :
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
தீண்டாமையை உறுதிமொழி :
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத , உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நான் , நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன் . திண்டாமையை அடிப்படையாகக் கொண்டு , எவர்மீதும் தெரிந்தோ , தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் , வாக்கு , செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன் .
அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க , சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் , உண்மையுடனும் , பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன் . இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் .
Post a Comment