சேலத்தில் பள்ளிக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி !
சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாகவும் தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும் கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து பொது முடக்கத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனாலும் சக மாணவர்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளி மூடப்பட்டுள்ளது.
Post a Comment