Title of the document

அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க உத்தரவு - SPD Proceedings




2020 -21 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , " பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” ( Safety & Security at School level ) என்ற தலைப்பில் , பார்வை 1 - இன்படி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் 6,173 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் , 31,297 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கும் நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது . 

1 இந்நிலையில் , 19.01.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் பார்வை இல் உள்ள வழிகாட்டுதல்களின்படி , விடுவிக்கப்பட்ட நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தவும் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை பள்ளிகளிடமிருந்து பெற்று 20.01.2021 ஆம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்தின் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

மேலும் பார்வை 3- இன்படி , அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் " சார்ந்து ஒரு நாள் இணையதள பயிற்சி 16.12.2020 முதல் TNTP மற்றும் DIKSHA Portal மூலமாக வழங்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தவர்கள் , நிறை செய்யாதவர்கள் விவரத்தை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுள்ள Google படிவத்தை உடனடியாக பூர்த்தி செய்வும் அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ! முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post