Title of the document

NTSE Exam 2020 - Hall Ticket Can Download From 21.12.2020 (www.dge.tn.gov.in)

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsafYIJQ66Ztg7n2Y46gsfej6JEE610pBj-1JktkS0n285pYtSCH0yl8m7xs55Po6eeLN-1kmUECCpgUYYG40CLcfRpX_7BKaAs7Z-bO53V2nBYpLXmp0y4KsuMmgBGN2i5MPFWOvN5Uue/s320/IMG_20201218_184537.jpg

27.12.2020 அன்று நடைபெறவிருக்கும் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே , ஒவ்வொரு தேர்வு கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மைய பதிவிறக்கம் செய்தவுடன் தேர்வுமையக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் தேர்வர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதையும் அம்மையத்திற்குட்பட்ட அனைத்து தேர்வர்களுக்கும் பெயர்பட்டியல் பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


தேர்வுகூடநுழைவுச்சீட்டு :


மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 21 .12.2020 முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் | முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏற்கனவே இத்தேர்விற்கு வழங்கப்பட்ட User ID | Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தேர்வர்களின் தேர்வுகூட நுழைவுச் சீட்டுக்களில் பெயர் / புகைப்படம் | பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமையாசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வெழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்துமாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post