Title of the document
Lock Down : தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜன.31 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு , இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி , முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
















தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும் , பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் , மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து , நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால் , நோய்த் தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது . கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000 ல் இருந்து தற்போது 8,867 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post