Title of the document

ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) ( Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations ) 




ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் அரசுப் பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இரத்து செய்திடல் - பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நிடைமுறைப்படுத்துதல் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுதல் தொடர்பாக 
 
 தமிழகத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பானது ஜாக்டோ - ஜியோ 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு , கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நியாயமான கோரிக்கைகளுக்காக , தமிழக அரசின் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு , தொடர்ச்சியாக போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . ஜாக்டோ ஜியோவின் அனைத்து போராட்ட இயக்க நடவடிக்கைகளுக்கும் ஊடகங்கள் வாயிலாகவும் போராட்டக் களத்திற்கு நேரிலே வந்தும் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர்களிலும் தங்களது ஆதரவினைத் தொடர்ச்சியாக நல்கி வருவதற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது .

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019 ஜனவரியில் தமிழகத்தில் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் - அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு , அதனால் குற்றக் குறிப்பாணைகள் வழங்கப்பட்ட 5068 ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து செய்தல் தொடர்பாக , தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டிசம்பர் 28 , 29 , 30 ஆகிய தேதிகளில் சந்தித்து முறையீட்டு மனு அளிப்பது என்று கடந்த 16.12.2020 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . 
 
கோவிட் -19 நோய்த் தொற்றினை எதிர்கொள்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் ஊரடங்கினால் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் தமிழக அரசிற்கு போதிய நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டிய நிலை உள்ளதைக் கருத்தில் கொண்டு , மாண்புமிகு தமிழக




ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) ( ( Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations )

 
 முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தமிழகத்திலுள்ள 12 இலட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் , சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் , சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தங்களது ஒருநாள் ஊதியத்தியமான ரூபாய் 150 கோடியினை வழங்கியுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . தமிழகத்தில் அரசுப் பணியில் பணியாற்றும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ , பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி , கடந்த ஆண்டு 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டோம் . 
 
இந்நிலையில் கடந்த 29.01.2019 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் , அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நான் அன்போடு கேட்டுக் கொள்வதெல்லாம் , போராட்டத்தை உடனடியாக கை விடுங்கள் . பணிக்குத் திரும்புங்கள் . மக்கள் பணியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்வோம் " என்ற அன்பான வேண்டுகோளை ஏற்றும் பொதுமக்கள் , மாணவர் நலன் கருதியும் அரசுப் பணிகள் முடங்குவதால் அரசுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும் வேலைநிறுத்தத்தை கடந்த 30.01.2019 அன்றே கைவிட்டு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அரசுப் பணியாளர்களும் பணிக்கு திரும்பினர் . 
 
போராட்டம் நிறைவுக்கு வந்து ஏறத்தாழ 23 மாதங்கள் கடந்த நிலையிலும் , 5068 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின்மீது போராட்ட காலத்தில் போடப்பட்ட குற்றக் குறிப்பாணைகள் 17 ( பி ) , 1500 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டது ஆகியவை இன்றும் நிலுவையில் உள்ளது . குற்றக் குறிப்பாணைகள் 17 ( பி ) நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வும் , வருடாந்திர ஊதிய உயர்வும் , பணி ஓய்வும் , பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் . போராட்டத்தின்போது காவல் துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னணியில் FIR பதியப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளது .
 
 இதோடு மட்டுமல்லாமல் , ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் புனையப்ட்ட குற்றக் குறிப்பாணைகள் 17 ( பி ) நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி , முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு . மு . சுப்பிரமணியன் உள்ளிட்ட 42 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசுப் பணியாளர்கள் பணிஓய்வு பெற அனுமதிக்கப்படாத காரணத்தினால் , நாளது தேதிவரை ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளார் . கொரோனா நோய் தொற்று மிகக் கடுமையான உள்ள இந்த நேரத்திலும் , ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு 17 ( பி ) குற்றக் குறிப்பாணை பெற்ற ஒரே காரணத்திற்காக , அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது என்பது கொரோனா பாதிப்பினை விட மிகக் கொடியதாகும் .


வரை தமிழக அரசின் கொரோனா நோய் தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுக் கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டு 23 மாதங்கள் கடந்த நிலையில் , ஜாக்டோ ஜியோ சார்பாக பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும் , தமிழக அரசு ஆசிரியர் - அரசு ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இரத்து செய்து , ஒரு சுமூகமான சூழ்நிலையினை உருவாக்காமல் இருப்பது என்பது ஆசிரியர் - அரசு ஊழியர் - அரசுப் பணியார்களிடையே கடுமையான அதிருப்தியினையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது . 
 
ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் - அரசுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக கடந்த 11.06.2018 முதல் 13.06.2018 | உண்ணாவிரதம் மேற்கொண்டபொழுது , 12.06.2018 | அன்று சட்டமன்றத்தில் தாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததையும் அதோடு மட்டுமல்லாமல் , ஆளுகின்ற அரசின் ஆசிரியர் , அரசு ஊழியர் - அரசுப் பணியாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கடந்த 14.09.2020 முதல் 16.09.2020 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததையும் நாங்கள் நெகிழ்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறோம் . 
 
நியாயமான கோரிக்கைகளுக்காக கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டடதற்காக , 5068 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் - அரசுப் பணியாளர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் இரத்து செய்வது , பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் தங்களது கட்சியின் சார்பாக தமிழக அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் ..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post