CPS ஒழிப்பு இயக்கம் என்னும் தன்னெழுச்சி ஊழியர் இயக்கம்
உண்மையான குறிக்கோளுடன்,
சரியான பாதையில், நேர்மையாக நடைபோடுகிறது
என்பதை நிரூபிக்கும் வண்ணம் முதல் அங்கீகாரமாக, முதல் வெற்றியாக
JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாநில மையம் தாமாக முன்வந்து CPS ஒழிப்பு இயக்கத்துடன் இணைந்து அறவழிப் போராட்டங்களில் பங்கெடுப்பது என்று ஒருமனதாக முடிவு செய்து அறிவித்துள்ளது👏👏🤝🤝🙏🙏🙏💐💐💐💐
அதன்படி, இன்று JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில தலைவர்
தோழர் குன்வர் தலைமையில்
திண்டுக்கல் மாவட்டம்- வத்தலக்குண்டு கல்வி மாவட்ட ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்ட
"முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்"
மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நமது CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.பிரடெரிக் ஏங்கல்ஸ் அவர்களும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஜான் லியோ சகாயராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமாய் அமைந்த JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் திருமிகு.குன்வர், மாநில பொதுச்செயலாளர் திருமிகு.ஜெகநாதன், மாநில பொருளாளர் திருமிகு.பொய்யாமொழி மற்றும் இயக்க தோழர்கள் குறிப்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.புனிதன் ஆகியோரை மனமார வாழ்த்துகிறோம்👏👏👏👏👏👏👏👏👏👏👏
நண்பர்களே! இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். ஆம்! அனைத்து சங்கங்களும் இதுபோல் முன் வந்து CPS ஒழிப்பு இயக்கத்திற்கு தங்களது ஆதரவையும், பங்கேற்பையும் தர வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏
CPS ஒழிப்பு இயக்கத்திற்கு JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது ஆதரவை வழங்கி உள்ளது.
இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் நடைபெற்ற அஞ்சல் அனுப்பும் போராட்டத்திற்கு JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.குன்வர் ஜோஸ்வா வளவன் தலைமை தாங்கினார். ஏராளமான ஆசிரியர்கள் பங்குபெற்றனர்.
CPS ஒழிப்பு இயக்க திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஜான் லியோ சகாயராஜ் , மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
CPS ரத்து என்கிற ஒற்றை கோரிக்கையை ஒரு குடையின் கீழ் நின்று போராடி வென்று காட்டுவோம்🤝🤝🤝🤝💪💪💪💪👍👍👍👍
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!!
வெற்றி பெறுவோம்!!!
மாநில மையம்,
CPS ஒழிப்பு இயக்கம்.
We fight against the cps schemes and abolish jit.we togather forit.
ReplyDeletePost a Comment