Title of the document

சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு நடத்த திட்டம்?




பள்ளிகள் திறப்பு தள்ளி போயுள்ளதால், சட்டசபை தேர்தலுக்கு பின், பொது தேர்வுகளை நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக, மார்ச் முதல், பள்ளிகள், கல்லுாரிகள் செயல்பட வில்லை. புதிய கல்வி ஆண்டு துவங்கிய நிலையிலும், பள்ளிகள் திறக்கப்படாததால், தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்துகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக, பாடம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. கல்லுாரிகள், பயிற்சி மையங்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.- இதை தொடர்ந்து, பள்ளிகளும் விரைவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பண்டிகை காலம் என்பதால், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக, பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட முடியாமல், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கடந்த மார்ச்சில், பொதுத்தேர்வுகளை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், தமிழக சட்டசபைக்கு, வரும் ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், அந்த நேரத்திலும், பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, தேர்தல் முடிந்ததும், ஜூன் மாதம் தேர்வை நடத்தலாம் என, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன.இதுகுறித்து, தமிழக சுகாதாரத் துறை, உயர் கல்வித் துறை, மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதற்கு, முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், அறிவிப்பு வெளியிட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துஉள்ளது..

இந்த செய்தியையும் படிங்க !!


💢⚡ One Day Training for Teachers
  https://www.kalvinews.com/2020/12/scope-2020-one-day-training-for-teachers.html

💢⚡ அரசுப்பள்ளி வகுப்பறையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!
 https://www.kalvinews.com/2020/12/blog-post_4.html

💢⚡BT Teachers Promotion - தகுதியானவர்களின் விவரங்களை கோரி பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
  https://www.kalvinews.com/2020/12/bt-teachers-promotion.html

💢⚡High School HM Panel List 2021 & Director Proceeding..
 https://www.kalvinews.com/2020/12/high-school-hm-panel-list-2021-director.html

💢⚡சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு நடத்த திட்டம்?
 https://www.kalvinews.com/2020/12/blog-post_32.html

💢⚡ரூ.7.38 கோடி பரிசு வென்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்!
 https://www.kalvinews.com/2020/12/738.html

💢⚡SBI-ல் salary account open செய்தால் locker முதல் loan வரை அனைத்திலும் சலுகை கிடைக்கும்
 https://www.kalvinews.com/2020/12/sbi-salary-account-open-locker-loan.html

💢⚡TNPSC- DEO FINAL RANK LIST PUBLISHED
  https://www.kalvinews.com/2020/12/tnpsc-deo-final-rank-list-published.html

💢⚡2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தொடர்பாக, வருமான வரித்துறை வெளியிட்ட முழுமையான தகவல் தொகுப்பு
  https://www.kalvinews.com/2020/12/2020-21_4.html

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post