Title of the document


B.Ed சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச.10 கடைசித் தேதி- உயர் கல்வித்துறை அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:






''அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம். 04-12-2020 முதல் 10-12-2020 வரை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும்போது தங்களின் சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்தக் கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணிற்குக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.

இது தொடர்பாக care@tngasaedu.org மற்றும் tndceoffice@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post