இன்று 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
''வளிமண்டல சுழற்சி காரணமாக
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
கடலூர்,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம்
ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்’’ என தெரிவித்துள்ளது.
Post a Comment