Title of the document

அரசுப் பள்ளி தலைமையாசிரியரிடம் ரூ. 16.5 லட்சம் மோசடி - சினிமாவை மிஞ்சும் சம்பவம் - போலீசில் புகார் !!


வேறு நபருக்கு. சொந்தமான வீட்டை தனது. என விற்பதாக கூறி அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம்‌ ₹16.5 லட்‌ சம்‌ மோசடி செய்த நபர்‌ மீது நடவ டிக்கை எடுக்க கோரி வேலூர்‌ எஸ்பி அலுவலகத்தில்‌ புகார்‌ அளிக்கப்பட்‌ டுள்ளது. வேலூர்‌ மாவட்டம்‌ குடியாத்தம்‌ புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்‌ வளர்மதி. இவர்‌ ராஜாகுப்பம்‌ நடு. நிலைப்பள்ளியில்‌ தலைமையாசி ரியையாக உள்ளார்‌. இவர்‌ நேற்று வேலூர்‌ எஸ்பி அலுவலகத்தில்‌ அளித்த மனுவில்‌ கூறியிருப்பதா வது:  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_gu092OotuH4upuTW1vkIOeX-nW-QAgVumR3XGcyGTH6-HP1Sml_rbMtpT_Hp6jwOqC-2WMM8i0fVa0kungVbkTtsArhcFJErVb8W0inDF7Whh_HYvu-GZVGV-Qowztp0UW9-nP4OXNA/w400-h189/hm.jpg

திருப்பத்தூர்‌ மாவட்டம்‌ வாணி யம்பாடி நியூடவுன்‌ தென்றல்‌ நகரை சேர்ந்த நந்தகோபால்‌ என்பவர்‌ ரியல்‌ எஸ்டேட்‌ தொழில்‌ செய்வ தாக என்னிடம்‌ அறிமுகமானார்‌. அவருக்கு குடியாத்தம்‌ நத்தம்‌. கிராமத்தில்‌ சொந்த வீடு உள்ள தாகவும்‌, அதனை ₹27 லட்சத்திற்கு. விற்க உள்ளதாகவும்‌ தெரிவித்தார்‌.

அதன்பேரில்‌ கடந்த மே மாதம்‌. எனது கணவருடன்‌ சென்று நேரில்‌. பார்த்தேன்‌. அப்போது நந்தகோபால்‌. மற்றும்‌ அவரது மனைவி அஞ்சலி இருவரும்‌ வீட்டுச்சாவி இல்லை எனக்கூறி ஜன்னல்‌ வழியாக வீட்டை காண்பித்தனர்‌. எங்களுக்கும்‌ வீடு, பிடித்திருந்தால்‌ அதனை வாங்க முடிவு செய்தோம்‌. அதன்படி கடந்த ஜூன்‌ மாதம்‌ 20ம்‌ தேதி ₹1.50 லட்‌ சம்‌ செலவில்‌ ஒப்பந்தம்‌ போட்டு 2 தவணைகளாக மொத்தம்‌ ₹15 லட்சத்தை கொடுத்தோம்‌. அதன்பிறகு, வீடு நந்தகோபாலுக்கு சொந்தமானது இல்லை என்பதும்‌, அந்த. வீடு வேறு ஒருவருடையது என்பதும்‌ பிறகு எங்களுக்கு தெரிந்தது. நந்தகுமாரை தொடர்பு கொண்டு. கேட்டபோது தவறாக நடந்துவிட்டதாகவும்‌, பணத்தை ஒரு மாதத்தில்‌ திருப்பி கொடுத்து விடுவதாகவும்‌: தெரிவித்தார்‌.

மேலும்‌ அவர்‌ தனது மனைவி அஞ்சலி பெயரில்‌ 3 வங்கி 'செக்குகளை கொடுத்தார்‌. ஆனால்‌. அவரது வங்கி கணக்கில்‌ பணம்‌. இல்லை என திரும்பி வந்துவிட்டது. நேரில்‌ சென்று பணத்தை கேட்டால்‌. அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்‌. இதுகுறித்து குடியாத்தம்‌ டிஎஸ்பியி டம்‌ புகார்‌ கொடுத்தோம்‌. அதன்பேரில்‌ காவல்துறையினர்‌ விசாரணை நடத்தினர்‌.

10 நாட்களில்‌. பணம்‌ தந்துவிடுதாக தெரிவித்தார்‌. ஆனால்‌ தற்போது தலைமறைவாகி விட்டார்‌. எனவே மோசடி செய்த. நபரிடம்‌ இருந்து மொத்தம்‌ ₹16.50. லட்சத்தை பெற்றுத்தர நடவடிக்கை: எடுக்கவேண்டும்‌. இவ்வாறு அதில்‌ கூறியுள்ளார்‌. சினிமாக்களில்‌ தான்‌. 'இதுபோன்ற நூதன மோசடி சம்ப. வங்கள்‌ வரும்‌. ஆனால்‌ தற்போது சினிமாவை மிஞ்சும்‌ வகையில்‌ நிஜமாகவே நடந்துள்ள இந்த நூதன மோசடி சம்பவத்தை அறிந்த போலீசாரும்‌ அதிர்ச்சிக்குள்ளானார்கள்‌

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post