Title of the document
கற்போம் எழுதுவோம் இயக்கம் 

புதிய வயது வந்ததோர் கல்வித் திட்டம் -TN-EMIS கைபேசி வாயிலாக கற்போர் (Learners) மற்றும் தன்னார் வல ஆசிரியர்கள் (volunteer teachers) விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்
 
கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் TN - EMIS கைபேசி செயலி வாயிலாக கற்போர் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) விவரங்கள் பதிவேற்றம் செய்தல் - சார்பு 
 
பார்வை:
1.மத்திய அரசு கடித எண் . No9-3 / 2020 - NLM.1 . நாள் : 08.05.2020,30.09.2020,14.10.2020 
2. திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டம் ( Project Approval Board ( PAB ) , நாள் : 21.10.2020 
3. மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக் கூட்ட நாள் : 23.10.2020,04.11.2020 
4. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் ( சமக்ர சிக்ஷா ) திட்ட இயக்ககத்தில் , TN - EMIS கைபேசி செயலி சார்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்ட நாள் : 12.11.2020

 பார்வையிற் காணும் மத்திய அரசின் கடிதங்கள் மற்றும் 21.10.2020 அன்று நடைபெற்ற Project Approval Board ( PAB ) கூட்ட முடிவுகளின் படி , தமிழகத்தில் , 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு , அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை , மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் , அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது .  

இதன்தொடர்ச்சியாக , கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரைக் கண்டறியும் பணிகள் மற்றும் மையங்களை அடையாளம் காணும் பணிகள் அனைத்து மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இவை சார்ந்த எண்ணிக்கை விவரங்கள் அனைத்தும் Google Spread Sheet வாயிலாக இவ்வியக்ககத்தினால் பெறப்பட்டுள்ளன . மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி , தற்போது , அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்ட கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் பெயர் , வயது , ஆதார் எண் உள்ளிட்ட இதர விவரங்களை TN - EMIS கைபேசி செயலி வாயிலாக கீழ்கண்டுள்ளவாறு பெற திட்டமிடப்பட்டுள்ளது . * TN - EMIS கைபேசி செயலியின் ( Mobile App ) வாயிலாக அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களால் ( BRTEs ) கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .

* ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் ( சமக்ர சிக்ஷா ) திட்டத்தின் கீழ் , அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் TN - EMIS கைபேசி செயலி சார்ந்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User Name and Password- யை பயன்படுத்தி மேற்கண்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் .  
 
* TN - EMIS கைபேசி செயலியின் Home Page பகுதியில் புதிதாக உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ள கற்போம் எழுதுவோம் ( Karpom Ezhuthuvom ) என்கிற ICON யை Click செய்து , அதற்குள் கொடுக்கப்பட்டுள்ள Add Learners மற்றும் Add Volunteer Teachers ஆகிய ICON வாயிலாக , கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் விவரங்களை அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களால் 13.11.2020 மாலை முதல் கைபேசியின் வாயிலாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் .  
 
* அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கற்போர் கற்றல் மையங்களாக ( Learners Literacy Centers ) செயல்படும் . எனவே , அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் சார்ந்த கற்போர்கள் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் விவரங்களைத் TN - EMIS கைபேசி செயலியில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் .  
 
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைய உள்ள கற்போர் கற்றல் மையங்கள் ( Learners Literacy Centers ) கற்போரின் வசிக்கும் பகுதிக்கு அருகில் இல்லாதிருப்பின் , கற்போர் குடியிருப்பின் அருகேயுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் கற்போர் மற்றும் தன்னார்வலர்களின் விவரங்களைப் பதிவு செய்து , அந்தந்த பள்ளி வளாகத்திலேயே கற்றல் மையங்கள் ( Learners Literacy Centers ) செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் . TN - EMIS Cue Maulu Ncor curullus , Learners - Volunteer Teachers Mapping செய்யப்படும் . எனவே , செயலியில் கோரப்பட்டள்ள விவரங்களை அந்தந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் அடிப்படையில் மிகக் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் .  
 
* அந்தந்த மாவட்ட அளவில் , அனைத்து ஊரக மற்றும் நகர் புற ஒன்றியங்களுக்கு இலக்கு நிருணயிக்கப்பட்டு , Google Spread Sheet வாயிலாக இவ்வியக்ககத்திற்கு வழங்கப்பட்டுள்ள கற்போர் எண்ணிக்கை மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் எண்ணிக்கையின் படி , TN - EMIS கைபேசி செயலியில் கோரப்பட்டுள்ள கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் . 
 
 * கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் விவரங்களை பதிவேற்றம் செய்திடும் முறைகள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன .  
 
* கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் விவரங்களை பதிவேற்றம் செய்திடுதல் சார்ந்த தொழில்நுட்ப உதவிக்கு tnemiscel@gmail.com , dnfae.tn@nic.in ஆகிய மின்னஞ்சல்கள் வாயிலாகத் தொடப்பு கொள்ளலாம் .  
 
* TN - EMIS கைபேசி செயலியில் கற்போம் எழுதுவோம் ( Karpom Ezhuthuvom ) ICON வாயிலாக மேற்கொள்ளப்படும் அனைத்து மாவட்டம் , ஒன்றியம் மற்றும் பள்ளிகள் வாரியான பதிவேற்ற விவரங்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் வாரியான விவரங்கள் , ஒவ்வொரு நாளும் பதிவேற்றப்பட்ட கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) விவரங்கள் ஆகியனவற்றை , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ( சமக்ர சிக்ஷா ) மாநிலத் திட்ட இயக்குநர் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் , இணை இயக்குநர் ஆகிய அலுவலர்களால் பதிவிறக்கம் , கண்காணிப்பு மற்றும் ஆய்வு செய்திடும் வகையில் EMIS Website- ல் பிரத்யேக வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன .  
 
மேலும் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் , கற்போம் எழுதுவோம் திட்டக் கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் விவரங்களை 13.11.2020 முதல் 21.11.2020 க்குள் தவறாது பதிவேற்றம் செய்திட வேண்டும் . இது சார்ந்த ஆய்வுக் கூட்டம் 18.11.2020 அன்று மாலை 5 மணியளவில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் காணொளி வாயிலான ஆய்வுக் கூட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் ( சமக்ர சிக்ஷா ) மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் தலைமையில் நடத்தப்படும் .  
 
எனவே , முன்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின் படி , TN - EMIS கைபேசி செயலியில் கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் விவரங்களை 13.11.2020 மாலை முதல் 21.11.2020 க்குள் கைபேசியின் வாயிலாக அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களால் பதிவேற்றம் செய்திட உரிய உடன நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் , இது சார்ந்து 18.11.2020 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள காணொளி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் உரிய விவரங்களுடன் ( 18.11.2020 அன்று 4 மணி வரையிலான TN - EMIS கைபேசி செயந பதிவேற்ற விவரங்கள் உள்பட ) பங்கேற்கவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post