பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்புத் தேதி, சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசைப் பொறுத்தவரை எந்த முடிவையும் தானாக எடுப்பது கிடையாது. தகுந்த ஆலோசனைகளைப் பெற்றே செயல்படுகிறது. இதில் அரசியலை விட அறிவுபூர்வமாக மட்டுமே அணுக வேண்டும்.
மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. எனினும், மாணவர்களின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டது. எனினும் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்கலாம் என்று அறிவுறுத்தினர்.
இது மக்களுக்கான அரசு என்பதன் உதாரணமாக பள்ளிகள் திறப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கருத்துக்கு மதிப்புக் கொடுத்து வீண் பிடிவாதம் இல்லாமல் அரசு செயல்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. பொது நோக்கம் மட்டுமே''.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Post a Comment