தமிழகத்தில் இன்று 1,430 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 393 பேர் பாதிப்பு: 1,494 பேர் குணமடைந்தனர்
- தமிழகத்தில் இன்று 1,430 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- இது மொத்த எண்ணிக்கை 7,79,046.
சென்னையில் 393 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.
சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,037 பேருக்குத் தொற்று உள்ளது.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
- தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,073.
- இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இதில் 7 பேர் தனியார் மருத்துவமனை,
- 6 பேர் அரசு மருத்துவமனை உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,694 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3843 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Post a Comment