Title of the document

பள்ளிகள் திறப்பு குறித்து - உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு தகவல் 

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்.. 

 தமிழ்நாட்டில், இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என, மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, தனியார் பள்ளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 75 சதவிகித கட்டணத்தில் மீதமுள்ள 35 விழுக்காடு கட்டணத்தை பிப்ரவரிக்குள் வசூலிக்கலாம் என தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். இந்த தொகையை தவணை முறையில் வசூலிப்பது குறித்து பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post