பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடி நிவாரணம் சாத்தியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த 2011ம் ஆண்டு பணியிலிருந்து தமிழக அரசால் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மாற்றுப்பணி வழங்குமாறு கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு 2014ல் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தன்ராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கறிஞர் ரகுநாத சேதுபதி, ‘‘இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஆயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளது. ,’’ என வாதிட்டனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்முகுல் ரோத்தகி,”இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை. பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக தற்போது நிவாரணம் வழங்குவது என்பது சாத்தியம் இல்லைல’’ என்றார். பின்னர், வழக்கு வரும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment