தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு!
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி தீபாவளியையொட்டி தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.சி.கருப்பணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையும், இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வாழ்த்துகள். தமிழக மக்கள் மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு தீபாவளியும் பண்டிகையின்போது நாம் குடும்பங்களுடன் சொந்தங்கள் பல உறவுகளுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகிறோம்.
Post a Comment