Title of the document

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும் நாளையும் சிறப்பு முகாம். - இந்திய தேர்தல் ஆணையம்!!

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல். திருத்தம் செய்தல் மற்றும் நீக்கம் செய்வதற்காக இன்று சனிக்கிழமையும் நாளை 22ஆம் தேதி ஞாயிறு கிழமையும் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இந்திய தோதல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பொதுமக்களின் பார்வைக்கு நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் இருந்தால் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வருகிற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலா்களிடம் வழங்கலாம்.

மேலும் பொதுமக்கள் நலன் கருதி இன்று 21 நாளை 22ஆம் தேதியும் 2 நாட்கள் வாக்காளா்கள் சோப்பு குறித்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றது.


வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும் மற்றும் திருத்தம், நீக்கம் குறித்தும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். இந்த தினங்களில் தவற விட்டவர்கள் டிசம்பர் மாதம் 12.12.2020,13.12.2020 ஆகிய தேதிகளில் மீண்டும் முகாம் நடைபெற உள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்


பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1


முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)


1.பாஸ்போர்ட்


2.கேஸ் பில்


3.தண்ணீர் வரி ரசீது


4.ரேஷன் அட்டை


5.வங்கி கணக்கு புத்தகம்


6.ஆதார் கார்டு


வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)


1.10ம் வகுப்பு சான்றிதழ்


2.பிறப்பு சான்றிதழ்


3.பான் கார்டு


4.ஆதார் கார்டு


5.ஓட்டுனர் உரிமம்


6.பாஸ்போர்ட்


7.கிசான் கார்டு


பட்டியலின பெண்கள் காலில்.. அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்ற வானதி சீனிவாசன்..!


அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)


1.பான் கார்டு


2.ஓட்டுனர் உரிமம்


3.ரேஷன் கார்டு


4.பாஸ்போர்ட்


5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்


6.10ம் வகுப்பு சான்றிதழ்


7.மாணவர் அடையாள அட்டை


8.ஆதார் கார்டு

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post