Title of the document

 இந்தியாவில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க முடிவு!

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 இந்தியாவில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது நாடு முழுவதும் 8 மணி நேர வேலைதான் நடைமுறையில் உள்ளது. வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எனவே நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என வாரம் ஆறு நாட்களுக்கு 48 மணி நேர வேலை, ஒரு நாள் ஓய்வு தான் நடைமுறையில் உள்ளது.


இந்நிலையில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரம் அதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

WOR

மத்தியில் ஆளும் பாஜக எல்லா சட்டங்களிலும் தொடர்ந்து திருத்தம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படுகிறது.


பணியின் போது பாதுகாப்பு, சுகாதாரம், பணிக்கான சூழலை மேம்படுத்துவது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இது தொடர்பான வரைவு ஆணையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post