அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசு நாளிதழில் வெளியீடு!
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு அண்மையில் ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொன்டுவரப்பட்டது.
மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், பல்வேறு கட்ட வலியுறுத்தலுக்குப் பின்னர் ஒன்றரை மாதத்திற்குப் பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பலர் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் முறைப்படி மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இது பொருந்தாது என நீலகிரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் அரசு உதவி பெரும் பள்ளிகளாகவே இருந்தாலும் அவை தனியார் பள்ளிகள் தான் எனவும் முதல்வர் கூறினார்.
ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment