Title of the document

 மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு! வழிமுறைகள் என்னென்ன?



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக் கனியாக இருப்பதால், மருத்துவ படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு நீண்ட இழுபறிக்கு பின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் ஒப்புதல் கிடைத்தது. இதனால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவித்திருந்தார்.


இந்நிலையில் யாரெல்லாம் இந்த உள் ஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் என்பது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:


6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பைத்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்

ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களை கையொப்பம் பெற்றுவர அலைக்கழிக்கக்கூடாது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post