Title of the document

 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது, அதில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 28 ஆம் தேதி முதல், வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அதன் படி, கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

மிக கனமழை:

தற்போது, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 

  1. நெல்லை, 
  2. குமரி, 
  3. ராமநாதபுரம், 
  4. தூத்துக்குடி, 

ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கோவை, சிவகங்கை, விருதுநகர், தேனி, புதுக்கோட்டை மற்றும் தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, திருப்பூரில் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சென்னையின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post