Title of the document

 நவ.16-ல் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் பெற்றோர் பங்கேற்க அழைப்பு.

  இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து, படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டு வந்தன. வரும் 16-ம் தேதி முதல் பள்ளி,கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


ஆனால், கரோனா 2-வது அலை மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருப் பதால், பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதனை பரிசீலித்த தமிழக அரசு, பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்தது. அதன்படி இன்று பள்ளி களில் பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.


இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 319 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக பள்ளிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு பெற்றோர் முககவசம் அணிந்து வர வேண்டும். பள்ளி வளாகத்தில் கிருமிநாசினியும் வைக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.


கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகளவில் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக் களை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், மக்களின் கருத்தை முழுமையாக அறிய வாய்ப்பாக இருக்கும். எனவே, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர் தவறாமல் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று வரும் 16-ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post