Title of the document

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நல இயக்ககம் பி 1 / 1962 / 20 / முதல் தளம் , கலச மஹால் , சேப்பாக்கம் , சென்னை - 5. நாள் : 08.10.2020 சிறுபான்மையின மாணவ - மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்குதல் 2020-21 தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர் , கிறித்துவர் , சீக்கியர் , புத்தமதத்தினர் , பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மத்திய / மாநில அரசு , அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு ( 1 ஆம் வகுப்பு முதல் ) , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி ( ம ) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையம் ( NSP ) மூலம் வரவேற்கப்படுகின்றன . கல்வி உதவித்தொகை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தால் நேரடி பயன் பரிமாற்றம் மூலம் மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் . புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை வேண்டி மாணவ மாணவியர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2020 . திட்ட வழிகாட்டி முறைகள் , இலக்கீடு , தகுதிகள் , விதிமுறைகள் ( ம ) நிபந்தனைகள் , மாணவர் / கல்வி நிலையங்களுக்கான அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் ( FAQ ) மற்றும் இணையம் செயல்படும் முறை ஆகியவைகள் மேற்காணும் இணையத்தில் தரப்பட்டுள்ளன . பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி ( ம ) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான படிப்புகளின் ( list of courses covered ) விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம் . அனைத்து கல்வி நிலையங்களும் இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பங்குபெற , சரியான UDISE IAISHET NCVT குறியீடு அடங்கிய சரிபார்ப்புப் படிவம் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மாவட்ட அளவிலான மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் , ( District Nodal Officer ) உதவிக்கு தொடர்பு மாவட்ட ஆட்சியர் வளாகம் . மாவட்ட வாரியான தொலைபேசி ( ம ) அலுவலர் மின்னஞ்சல் விவரங்கள் NSP இணையத்தில் தரப்பட்டுள்ளன . மாநில அளவிலான மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் ( State Nodal Officer ) , உதவிக்கு தொடர்பு சிறுபான்மையினர் நல இயக்ககம் , சேப்பாக்கம் , சென்னை -5 . அலுவலர் தொலைபேசி : 044-28523544 blour sur ces : nspnodal.mwtn@gov.in | செ.ம.தொ இ J / 896 / வரைகலை / 2020 இயக்குநர் , சிறுபான்மையினர் நலம் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post