Title of the document

 ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றுகளை எந்தெந்த நாட்களில் சமர்ப்பிக்கலாம் - SBI விளக்கம்

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. ஓய்வூதியர்கள், உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க எந்தெந்த நாட்களில் வர வேண்டும் என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பாரத ஸ்டேட்வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க, வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, வங்கிக்கு நேரடியாக வந்து உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும்போது, கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தங்களுடைய சேமிப்புக் கணக்கு எண்ணின் கடைசி எண் 1, 2 இருக்கும் வாடிக்கையாளர்கள் திங்கள்கிழமையும், 3, 4 எண் இருக்கும் வாடிக்கையாளர்கள் செவ்வாய் கிழமையும், 5, 6 எண் இருக்கும் வாடிக்கையாளர்கள் புதன்கிழமையும், 7, 8 எண் இருக்கும்வாடிக்கையாளர்கள் வியாழக்கிழமையும், 9, 0 எண் இருக்கும்வாடிக்கையாளர்கள் வெள்ளிக் கிழமையும் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நாட்களில் வர இயலாதவர்கள் சனிக்கிழமைகளில் வந்து சமர்ப்பிக்கலாம். இதன்மூலம், வங்கிகளில் கூட்டம் சேருவதைத் தவிர்க்கலாம். அதேசமயம், மூத்தகுடிமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்துக்குப் பதிலாக வேறொரு நாளில் சான்றிதழ் சமர்ப்பிக்க வந்தால், அவர்களை வங்கிகள் திருப்பி அனுப்பக் கூடாது.

மேலும், வேறு ஏதேனும் தேவைக்காக வர விரும்பும் மூத்தகுடிமக்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கிக்கு வரலாம். 

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post