Title of the document

 ஆசிரியர் கலந்தாய்வு ரத்து - புரோக்கர்கள் மூலம் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள்!

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் கலந்தாய்வு ரத்து புரோக்கர்கள் உதவியுடன் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள் உள்ளூர் ஆசிரியர்கள் அதிர்ச்சி (பத்திரிகை செய்தி.) 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWivUKDYIF9dvjA3m4LFbJ_8M54nyva8_ap-hQ_yjg0zz8iOkoVB-csqOoZvgRm7F3HfZrP4Z2IKkmA29VwNGA7ivnOoPBVD5dNgBMTTXXhhSlAW_P3iTVrmf7eydB2X4dHn2HgUIcsPUn/s320/tansfer%25281%2529.jpg

கொரோனாவால் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் , புரோக்கர்கள் உதவியுடன் வெளி மாவட்ட ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால் , உள்ளூர் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவியதை தொடர்ந்து , கடந்த மார்ச் முதல் 9 மாதமாக அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் , இந்தாண்டு பள்ளி கல்வித்துறையில் வழக்க மாக ஜூன் மாதம் நடை பெறும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வும் நடத்தப்படவில்லை. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது . இதை பயன்படுத்தி , விரும்பிய பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று கொடுக்க , நாமக்கல்லில் உள்ள கல்வித் துறை புரோக்கர்கள் வரிந்து கட்டிகொண்டு களம் இறங்கியுள்ளனர் . வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் , நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்கள் கல்வித்துறை புரோக்கர்கள் மூலம் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுவருகிறார்கள்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post