1 - 12th Std Assignments, Key Answers Download 2021

Title of the document

 NMMS Scholarship விடுபட்ட 703 மாணவர்கள் விபரம் கோரி இயக்குநர் உத்தரவு.இது குறித்து நமது கல்வி நியூஸ் வலைதளத்திற்கு கிடைத்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மின்னஞ்சலின்படி கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான NMMSS கல்வி உதவித் தொகை பெறுவதற்காக 6492 தகுதியுள்ள மாணவ மாணவியருக்கு விண்ணப்பிக்கப்பட்டது . அவற்றில் 5789 மாணவ / மாணவியற்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள 703 மாணவ / மாணவியரின் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இல்லாததாலும் அக்கணக்கு விவரங்கள் நடைமுறையில் வைக்கப்படாததாலும் கல்வி உதவித் தொகை செலுத்த இயலவில்லை என தெரிவித்து மேற்படி 703 மாணவ / மாணவியர்களின் தற்போது நடைமுறையில் உள்ள சரியான வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து உடன் அனுப்பிவைக்குமாறு இவ்வியக்ககத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 எனவே ,

IMG_20201014_074139

 மேற்படி உதவித் தொகை செலுத்தப்படாத 703 ) மாணவியர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . அவற்றில் தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த உதவித் தொகை கிடைக்கப் பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களின் தற்போது சரியான நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 

மாணவ / மேலும் , இப்பணியை 23.10.2020 ஆம் தேதிக்குள் முடித்து அன்று மாலை 5 மணிக்குள் idnsed@nic.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post