Title of the document

 BE - GATE EXAM விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு.
இது குறித்து நமது Kalvi News வலைதளத்திற்கு கிடைத்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத்தேர்வுக்குத் தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க, மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 25 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும்.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வுக்குத் தாமதமான கட்டணத்துடன் விண்ணப்பிக்கக் கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://gate.iitb.ac.in/

இதன்படி மாணவர்கள் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கேட் தேர்வை நடத்தும் ஐஐடி பாம்பே அறிவித்துள்ளது.ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Kalvi News வலைதளத்துடன் இணைந்திருங்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post