Title of the document

 NMMS 2015-16 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் சரிபார்த்து 13.11.2020 க்குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு 


 NMMS 2015-16 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் சரியாக இல்லாததால் உதவித் தொகை வழங்கப் படாமல் விடுபட்டது.. மாணவர்களின் வங்கி கணக்கை சரிபார்த்து 13.11.2020 குள் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு..இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சக கடிதத்தின் படி , கடந்த 2015-16 ஆம் ஆண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை ( NMMSS National Means - cum - Merit Scholarship Scheme ) வழங்குதல் சார்ந்து 5942 மாணவ / மாணவியர்களின் விவரங்கள் இவ்வியக்ககத்தில் பெறப்பட்டுள்ளது . அவற்றில் 4848 மாணவ / மாணவியருக்கு மட்டுமே NMMSS கல்வி உதவித்தொகை ரூ .12,000 / -வீதம் தனியரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது . மேலும் , மேற்படி NMMSS கல்வி உதவித் தொகை பெற்ற 4848 மாணவ / மாணவிகளின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது . அவற்றில் தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த மாணாக்கர்களின் விவரங்களை சரிபார்த்து , சார்ந்த மாணாக்கரின் வங்கிக் கணக்கில் கல்வி உதவித் தொகை ரூ .12,000 / - செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து அதன் அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 2015-16 ஆம் ஆண்டிற்கு , மொத்தமுள்ள 5942 மாணாக்கர்களில் கல்வி உதவித் தொகை பெற்ற 4848 மாணாக்கர்களைத் தவிர மீதமுள்ள 1094 மாணாக்கர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் சரியாக இல்லாததாலும் அக்கணக்கு விவரங்கள் நடைமுறையில் வைக்கப்படாததாலும் கல்வி உதவித்தொகை செலுத்த இயலவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

எனவே , மேற்படி கல்வி உதவித் தொகை செலுத்தப்படாத 1094 மாணவ / மாணவியர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . அவற்றில் தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த கல்வி உதவித் தொகை கிடைக்கப்பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களின் தற்போது சரியான நடைமுறையில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 13.11.2020 - க்குள் ( வெள்ளிக் கிழமை ) இவ்வியக்கக இணை இயக்குநர் ( நா.ந.தி ) அவர்களின் முகவரியிட்டு அனுப்பி வைத்துவிட்டு அதன் நகலினை இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( idnsed@nic.in ) அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இது மிகவும் முக்கியம் என்பதால் உரிய தனிக் கவனம் செலுத்தி செயல்படுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மீளவும் தெரிவிக்கப்படுகிறது . 

இணைப்பு : 

1.கல்வி உதவித் தொகை பெற்ற 4848 மாணவர்களின் விவரங்கள் 

2.கல்வி உதவித் தொகை கிடைக்கப் பெறாத 1094 மாணவர்களின் விவரங்கள் 3.படிவம் 30/200 பள்ளிக்கல்வி இயக்குநர் 

3 / ? பெறுநர் : அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் . 

நகல் : 

அரசு முதன்மைச் செயலாளர் பள்ளிக் கல்வித் துறை , தலைமைச் செயலகம் , சென்னை -9 - அவர்களுக்குத் தகவலுக்காகப் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது .

CLICK HERE TO DOWNLOAD PDF 

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post