NMMS : 2008 to 2016 வரை Offline-ல் விண்ணப்பித்து இதுவரை NMMSS உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ள வங்கிக் கணக்கு விவரம் 28.10.2020 - க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ,
பொருள் :
பள்ளிக் கல்வி - மத்திய அரசின் உதவிதொகை வழங்கும் திட்டம் தேசிய வழி மற்றும் தகுதி கல்வி உதவித் தொகை ( National Means Cum - Marit - Scholarship Scheme ) 2009-2010 ( NMMSS தேர்வு ஆண்டு 2008 ) முதல் 2017-2018 ( NMMSS தேர்வு ஆண்டு 2016 ) வரை இணைய வழியில் அல்லாமல் Offline- யில் விண்ணப்பித்து இதுவரை NMMSS உதவித்தொகை வழங்கப்படாமல் நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களுடன் 28.10.2020 - க்குள் அனுப்பக் கோருதல் - சார்பு .இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பார்வை :
1.இணைச் செயலாளர் அவர்களின்நேர்முக கடிதம் எண்.1-15 / 2017 - SS நாள் .07.09.2020 | 2.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் 21.08.2020 மற்றும் 20.10.2020 தேதியிட்ட F.No.1-15 / 2017 - SS , மின்னஞ்சல் கடிதம் 3.தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் .048951 , நாள் .22.09.2020 மற்றும் 24.09.2020
பார்வை 3 ல் காணும் இயக்குநரின் செயல்முறைகளின்படி கடந்த 2009-2010 ( NMMSS தேர்வு ஆண்டு 2008 ) முதல் 2017-2018 ( NMMSS தேர்வு ஆண்டு 2016 ) வரை இணைய வழியில் ( National Scholarship Portal ) அல்லாமல் Offline இல் விண்ணப்பித்து இதுரை NMMSS உதவித் தொகை பெறாமல் விடுபட்ட மாணவ / மாணவிகளின் சரியாக தகவல்களை நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களுடன் 28.09.2020 - க்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது . இத்திட்டத்தில் NMMSS உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான ஒரு சில மாணவ / மாணவிகளின் மத்திய அரசின் மற்ற உதவித்தொகைத் திட்டங்களில் எட்டாம் வகுப்பு வரை பயன்பெற்று அத்திட்டத்திலிருந்து விலகி ( Withdrawl செய்து ) ஒன்பதாம் வகுப்பு முதல் NMMSS உதவிதொகைக்கு Offline மூலமாக விண்ணப்பித்திருப்பர் . இவர்களில் விடுபட்டவர்களையும் இப்பட்டியலில் சேர்க்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்பட்டது . ஆனால் இதுவரை 19 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து மட்டும் விவரங்கள் பெறப்பட்டுள்ளது . மீதமுள்ள 18 மாவட்டங்களிலிருந்து இந்நாள் வரை பெறப்படவில்லை . மேலும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் கடந்த 2009-2010 ( NMMSS தேர்வு ஆண்டு 2008 ) முதல் 2017-2018 ( NMMSS தேர்வு ஆண்டு 2016 ) வரை இணைய uplulo ( National Scholarship Portal ) அல்லாமல் Offline- யில் விண்ணப்பத்து இதுவரை NMMSS உதவித்தொகை பெறப்படாமல் விடுபட்ட மாணவ மாணவிகளின் சரியான தகவல்களை நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களுடன் பூர்த்தி செய்து 28.10.2020 அன்று மாலை 5 மணிக்குள் jdnsed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கோட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
பெறுநர் :
சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள்
1.அரியலூர்
2. ஈரோடு
3.கரூர்
4.புதுக்கோட்டை
5.கிருஷ்ணகிரி
6.கன்னியாகுமரி
7.சிவகங்கை
8.தஞ்சாவூர்
9.நீலகிரி
10.தேனி
11.திருவள்ளூர்
12.திருவாரூர்
13 திருவண்ணாமலை
14.தென்காசி
15.செங்கல்பட்டு
16.திருப்பத்தூர்
17.இராணிப்பேட்டை
18. இராமநாதபுரம்
Post a Comment