Title of the document
கட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ( கடன் ) சென்னை -108 அவர்களின் சுற்றறிக்கை முன்னிலை : திரு.டி மீட்டர் ஜீவானந்தம் , துணைப்பதிவாளர் ( கடன் ) நாள் . 20.10.2020 . ந.க .2330 / 2020 / பசா பொருள் : பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் , நகர கூட்டுறவு சங்கங்கள் - 2020 ஆம் ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் நடத்த நிபந்தனைகளுக்குட்டு அனுமதி வழங்குதல் தொடர்பாக , பார்வை : பல்வேறு பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்களின் முன்மொழிவுகள் . 
சென்னை மண்டலம் துணைப்பதிவாளர் ( கடன் ) சரக கட்டுப்பாட்டில் செயல்படும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் வரும் 2020 ஆம் ஆண்டின் பண்டிகை காலங்களை சிறப்புடன் கொண்டாடும் பொருட்டு ஆண்டுப் பொதுப்பேரவைக் கூட்டம் நடத்துவதற்கான அனுமதி தருமாறு பார்வையில் காணும் முன்மொழிவுகள் பல கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் முன்மொழிவு பெறப்பட்டு உள்ளது . முன்மொழிவில் கோரியுள்ள இனம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு சங்க நலன் மற்றும் உறுப்பினர்களின் நலன் கருதி தற்சமயம் கொரோனோ நோய் தொற்று உள்ள நிலையிலம் தமிழக அரசு 144 தடை உத்தரவு காரணமாகவும் தமிழக அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்றியும் , கூட்டத்தில் விதிமீறல்கள் ஏதும் இன்றியும் பாதுகாப்பான வழிமுறையில் ஆண்டுபொதுப்பேரவைக் கூட்டம் நடத்த கீழ்காணும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது , நிபந்தனைகள்


 1. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ( covid ) தொற்று நோய் தடுப்பு விதிமுறைகளான 5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடாதிருத்தல் , தனிமனித சமூக இடைவெளியினை பின்பற்றுதல் , முகக்கவசம் அணிதல் , கிருமி நாசினி பயன்படுத்துதல் கைகளை நன்றாக கழுவுதல் போன்ற அனைத்து அறிவுரைகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் 

2. சங்க கட்டிடம் தவிர்த்து பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள வெளி இடங்களில் பொது இடங்களை பொதுப்பேரவைக் கூட்டம் நடத்துவதற்கு உள்ள பயன்படுத்தினால் சென்னை பெரு மாநகராட்சி அனுமதி மற்றும் காவல்துறை அனுமதி பெறுவதுடன் போதிய காவல்துறை பாதுபாப்புடன் நடத்தப்பட வேண்டும்

 3. ஆவின் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் வழங்கும் போது டோக்கன் வழங்கி ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட வேண்டும் 

 4. உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பங்கு ஈவுத்தொகையினை மின்னனு பணப்பரிமாற்றம் ( ECS Transfer ) மூலம் மட்டுமே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் 

 5. அதிகளவில் உறுப்பினர்கள் உள்ள சங்கங்கள் ஒரே நேரத்தில் கூடும் கூட்டத்தினை தவிர்க்கும் பொருட்டு உறுப்பினர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் நாட்களை பிரித்து உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு டோக்கன் வழங்கி எவ்வித புகார்களுக்கும் பிரச்சனைகளுக்கும் இடமின்றி விநியோகம் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் 

6. மேற்காணும் தமிழக அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்றாமலும் கூட்டத்தில் விதிமுறைகளை கடைப்பிடிக்காத நேர்வில் எழும் அனைத்து பிரச்சனைகள் மற்றும் விளைவுகளுக்கு சங்க நிர்வாகமே முழுப்பொறுப்பு ஆகும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .

 ஓம் / துணைப்பதிவாளர் ( கடன் ) 20/10/2020 துணைப்பதிவாளர் ( கடன் ) க்காக 

பெறுநர் : தலைவர் மேலாண்மை இயக்குநர் , 
1. அனைத்து பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் , 
2. அனைத்து கூட்டுறவு நகர சங்கங்கள் . 

நகல் : சென்னை மண்டல , கூடுதல் பதிவாளர் அவர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது ,
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post