Title of the document

 அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு திட்டம்?

 


  நமது வலைத்தளத்தில் கிடைத்த தகவல் படி தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிப்பு  வெளியாகி உள்ளது,  

அதன்படி மத்திய அரசு 92 ஆயிரம் கோடி வரை மாநில அரசுக்கு கடன் வழங்க அனுமதி அளித்துள்ளது. இத்தொகையை கொண்டு மாநில அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு மாநில அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தவல் வெளியாகியுள்ளது... இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வரவு, செலவு கணக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி, பத்திரங்கள் வெளியிட்டு 46 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்திருந்தது. ஆனால், கடந்த மார்ச் 25-ம் தேதி கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை நிர்வகிப்பதற்கும், கொரோனா சிகிச்சை மேற்கொள்ளவும் தமிழக அரசு அதிக அளவு நிதி ஒதுக்கியது.

முன்னதாக, 2020-21 நிதியாண்டில் 46 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு செலவினம் அதிகதித்ததால் இதை இருமடங்காக அதிகரித்து 86 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டமிட்டு உள்ளது. அதேவேளையில், மத்திய அரசு 92 ஆயிரம் கோடி வரை மாநில அரசுக்கு கடன் வழங்க அனுமதி அளித்துள்ளது. இத்தொகையை கொண்டு மாநில அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து நிதித் துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில், கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக மாநில அரசு அதிக நிதி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அரசுக்கு அதிகளவு நிதிச் சுமை ஏற்பட்ட போதும், ஜி.எஸ்.டி., எரிபொருள் மற்றும் மதுபானங்களின் வருவாய் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே தற்போதும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல் அரசுக்கு வேறு சில பிரிவுகளின் கீழ் வரவேண்டிய வருவாய் தற்போது வரை அதிகரிக்கவில்லை. என்றும், இந்த வரி வருவாய்கள் வரும் நாட்களில் அதிகாரிக்கத் தொடங்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கியதால், மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவன ஊழியர்கள் அரசின் போனஸ் அறிவிப்பை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, லாபம் ஈட்டுகின்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் சாதாரண போனஸ் கிடைக்கும் என்றும், இதனால், அரசின் செலவினங்கள் அதிகரிக்கும் எனவும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக, 3 ஆயிரத்து 737 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post