Title of the document
RTE ACT - 25% இலவச மாணவர் சேர்க்கை சார்ந்து இயக்குநரின் இன்றைய செயல்முறைகள் ! 
 
மெட்ரிகுலோன் பள்ளிகள் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள்- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 25 % ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை முதற்கட்டமாக இணைதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பங்களை சேர்க்கை செய்யப்பட்டது . ( Completion Certificate ) பணி முடிவுற்றதற்கான சான்று கேட்டல் சார்புபாக..இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 , பிரிவு 12 ( 1 ) ( சி ) மின்படி 25 % ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கான வழிமுறைகள் விரிவாக வழங்கப்பட்டு , முதற்கட்டமாக இணையதளத்தில் 27.08.2020 முதல் 25.09.2020 வரை விண்ணப்பித்து குலுக்கல் மற்றும் குலுக்கலின்றி தகுதியுள்ள குழந்தைகளை தெரிவு செய்து பெற்றோரின் முழு சம்மதத்துடன் பள்ளியில் அக்குழந்தை சேர்க்கை செய்ததை உறுதி செய்த பின்னர் EMIS இணையதளத்தில் பள்ளியின் வாயிலாக பதிவேற்றம் செய்யத் தெரிவிக்கப்பட்டது . அப்பணி முடிவுற்றதா என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்து ( Completion certificate ) முதற்கட்ட பணி முடிவுற்றதற்கான சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இப்பணி முழுமையாக முடிவடைந்த பின்னரே இரண்டாம் கட்டத்திற்கான காலி இடங்கள் EMIS தளத்தில் அளிக்க இயலும் .

..2 .. முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பொருளின் மீது தனிக்கவனம் செலுத்தி பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . EMIS இணையதளத்தில் முதற்கட்ட சேர்க்கை 24.10.2020 - க்குள் ( சனிக்கிழமை ) பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . மேலும் , 24.10.2020 -க்குப் பிறகு முதற்கட்ட சேர்க்கை இணையதளத்தில் மேற்கொள்ள இயலாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது . மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..    

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post