Title of the document
 
பாரதியார் பல்கலைக்கழகம் முதல் முறையாக எம்.பில் . , பிஎச்.டி . படிப்புகளுக்கு அக் .27 - ல் நுழைவுத் தேர்வை இணைய வழியில் நடத்துக்கிறது..

 
 பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் , கோவை , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்கலைக்கழக துறைகள் - இணைப்பு கல்லூரிகள் , அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்களில் முழு நேரமாகவும் மற்றும் பகுதி நேரமாகவும் நடத்தப்பட்டு வரும் எம்.பில் . , பிஎச்.டி . படிப்புகளுக்கு , வரும் அக்டோபர் 27 - ம் தேதி ( 27.10.2020 ) 11.00 மணியிலிருந்து 12.30 மணி வரை இணைய வழியில் , 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான பொது தகுதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது . இந்த தேர்வின் இணையதள முகவரி http://bucetonlineexam2020.b-u.ac.in 
 
இது குறித்துப் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி . காளிராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 
 
" பொது நுழைவுத்தேர்வுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைய தளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு , தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விவரங்கள் , தேர்வு நடத்தை விதிமுறைகள் இதர விவரக்குறிப்புகள் , அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைய தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது . பொது நுழைவுத்தேர்வுக்கு இணையம் மூலம் பதிவு செய்த மாணவர்கள் பல்கலைக் கழக இணையதளத்தில் , அவர்கள் முதுகலையில் படித்த பாடம் , மாணவரின் பெயர் , பதிவு எண் , பதிவு செய்த செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சலை சரிபார்த்துக் கொள்ளலாம் . என கிழேயுள்ள அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் மின்னஞ்சலுக்கு அனுப்பி சரிசெய்துக் கொள்ளலாம் chemistrybu 1982@gmail.com ( or ) coordinatorcet2020bu@gmail.com அல்லது 0422 )  2428311 , 0422-2428318 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மாதிரி தேர்வு  

 
இணையதளம் மூலம் நடைபெறும் தேர்வுக்கு , விண்ணப்பித்த மாணவர்களுக்கு , அக்டோபர் 23 ஆம் தேதி காலை 11.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இணைய வழியில் மாதிரி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அனைத்து விண்ணப்பித்த மாணவர்களும் , மாதிரி தேர்வு அனுபவத்தை அறிந்துகொள்ள அவர்களுக்கு வழங்கப்பட்ட உள்நுழைவு ஐடி ( Login ID ) மற்றும் கடவுச்சொல்லுடன் ( Password ) கட்டாயமாக மாதிரி தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறது . அக்டோபர் 27 - ம் தேதி ( 27.10.2020 ) இணையதளம் மூலம் நடைபெறும் தேர்வை இணைய வழியில் கண்காணிக்க , 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதம் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு , அவர்களுக்கு அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது . 
 
எம்.பில் . , பிஎச்.டி , படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுக்கு இணைய வழியில் 2854 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளார்கள் . அதில் ஆண்கள் 1057 , பெண்கள் 1797 . தேர்வுக்கான வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பல்கலைகழக இணையதளத்தில் உள்ளது . மேலும் இவ்விவரங்கள் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இணையவழியில் நடைபெற இருக்கும் இத்தேர்வை அதன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம . இளஞ்செழியன் அவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார் . யார் யாருக்கு விலக்கு ? யுஜிசி , சிஎஸ்ஐஆர் - நெட் , ( UGC , CSIR NET ) , நெட் ( NET ) , நெட் விரிவுரையாளர் ( NET --LS ) , செட் ( SET ) , DST- இன்ஸ்பையர் ( DST_INSPIRE ) , கேட் ( GATE ) , தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் , எம்.பில் . முடித்தவர்கள் , மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் , விமானப்படை நிர்வாகவியல் கல்லூரிப் பேராசிரியர்கள் , வெளிநாடுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த நுழைவுத்தேர்வு எழுதத் தேவையில்லை .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post