Title of the document
  • பள்ளிகள் திறப்பால் 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்று - பள்ளிகளை மீண்டும் மூட கோரிக்கை 
  •  மிசோரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதன் எதிரொலியாக 15 மாணவர்கள் உள்பட 58 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
  • ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..  
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மிசோரம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • மிசோரத்தில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் 15 பள்ளி குழந்தைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மிசோரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 58 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,447-ஆக அதிகரித்துள்ளது.
  • இதில் 249 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை கரோனா உயிரிழப்புகள் எதுவும் நிகழாத நிலையில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,198-ஆக அதிகரித்துள்ளது.

பள்ளிகள் திறந்ததன் எதிரொலியாக தற்போது மிசோரத்தில் பள்ளி மாணவர்களுக்கும் கரோனா பரவி வருகிறது. இதன் எதிரொலியாக பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post