Title of the document

RTE LIST 2020 : தனியார் பள்ளி இலவச மாணவர் சேர்க்கை பட்டியல் அக்.3-ல் வெளியீடு


கட்டாயக்கல்வி உரிமை சட் டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங் களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல் லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன.

நடப்பு ஆண்டு சேர்க்கைக் கான விண்ணப்பப் பதிவு rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக கடந்த ஆக. 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 61 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள் ளனர்.

இந்நிலையில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப் பித்தவர்களின் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர் வானவர்களின் பெயர்ப் பட்டியல் அக். 3-ம் தேதி வெளியிடப்படும். அதேநேரம், நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரி வித்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post