Title of the document

RTE Act - 25 சதவிகித இடஒதுக்கீடு: செப்டம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம் 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர செப்டம்பர் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின்கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இவை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களும் இணையதளத்திலும், சம்மந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் செப்டம்பர் 30 தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்மந்தப்பட்ட பள்ளியில் அக்டோபர் 1-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள். மேலும் சேர்க்கைக்கு தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர்ப்பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் அக்டோபர் 3-ம் தேதி இணையதளத்திலும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அ. கருப்பசாமி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post