Title of the document
பகுதி நேர ஆசிரியர்களுக்கு (PART TIME TEACHERS கால முறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

'பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும், ௧௨ ஆயிரம் பேருக்கு, பணி நிரந்தரம் அளித்து, கால முறை ஊதியம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


அவரது அறிக்கை:

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில், பகுதி நேரமாக பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என, மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள்,௮ ஆண்டுகளுக்கும் மேலாக, மிகக் குறைந்த ஊதியத்தில் அவதிப்பட்டு வருவதற்கு, முடிவு கட்ட வேண்டும்.அதை செய்ய, அரசுக்குபெரிய அளவில், செலவாகி விடாது. எனவே, பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும், ௧௨ ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் அளித்து, கால முறை ஊதியம்வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி வகுப்புகளை விரும்பும் குழந்தைகள், 'ஆன்லைன்' வகுப்புகளை விரும்புவதில்லை. ஆனாலும், ஆன்லைன் வகுப்புகள்வாயிலாக, அந்தக் குழந்தைகளை, பள்ளி நிர்வாகங்கள், 'டார்ச்சர்' செய்கின்றன.நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளி கல்வித் துறையோ, 'ஆன்லைன்' வகுப்புகளை ரத்து செய்வதாக அறிவிக்காமல், தனியார் பள்ளிகள் நோகாத வகையில், ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என, பூசி மெழுகிறது. இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post