Title of the document
 Kalvi Tv யில் ஒளிபரப்பாகும் பாடங்கள் - வீடு வீடாக வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!  





  • கல்வி, 'டிவி'யில் ஒளிபரப்பாகும் பாடங்களின் கால அட்டவணையை, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில், கொரோனா பரவுவதால், பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், 'ஆன்லைன்' மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வி, 'டிவி' மற்றும் மற்ற தனியார், 'டிவி'களில் பாடம் நடத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இத்திட்டத்தை, ஜூலை, 14ம் தேதி முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.தமிழகம் முழுதும், மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள, 437 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், கல்வி, 'டிவி' யில் பாடம் நடத்தப்படுவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கருதினர்.

இதையடுத்து, அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, கல்வி, 'டிவி'யில் ஒளிபரப்பாகும் பாடங்களின் கால அட்டவணையை கொடுத்து, பாடங்களை கவனிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களின், இந்த நடவடிக்கை, பொதுமக்கள், பெற்றோர் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post