All Pass ஆன அரியர் மாணவர்களுக்கு புதிய சிக்கல்.! மாணவர்களுக்கு அதிர்ச்சி.!
கொரோனா வைரஸ் தொற்றால் இறுதி செமஸ்டர் தவிர மற்ற அனைத்து தேர்வுகள் எழுத விலக்கு அளித்து கிட்டத்தட்ட அனைவரும் தேர்ச்சி என்ற பாணியில் தமிழக அறிவித்தது.
அரசின் அறிவிப்பால் அரியர் வைத்திருந்த மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர் அதிலும் ஒரு மாணவர் 25 அரியர்களில் தேர்ச்சி என மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தற்போது அரியர் வைத்திருந்தவர்களுக்கு மதிப்பெண் அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரியர் வைத்திருந்த பலருக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் வரவில்லை என புகார். External மற்றும் Internal மதிப்பெண்களை கொண்டுதான் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் தற்போது இதில் தான் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் படி பார்த்தால் அரியர் வைத்துள்ள பலர் தேர்ச்சிக்கான மதிப்பெண் பெறுவது கடினம் என பல கல்லூரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Post a Comment