Title of the document

மேல்நிலை பள்ளி வகுப்புகள் எப்போது? கல்வி துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!


*  பாலிடெக்னிக் கல்லுாரி, மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது துவங்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


*கோவையைச் சேர்ந்த, பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு: என் மகன் வருண்குமார், 'ஸ்நுாக்கர்' விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால், 10ம் வகுப்பு படிப்பை, பாதியில் நிறுத்தி விட்டார். தனியாக படித்து, தனித்தேர்வு எழுத, ஹால் டிக்கெட் பெற்றார்.
* செய்முறை தேர்விலும் பங்கேற்றார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 'அனைவரும் பாஸ்' என, அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத, ஹால் டிக்கெட் பெற்ற தனி தேர்வர்களுக்கு, தேர்ச்சி பற்றி அறிவிக்கவில்லை.


*இதற்கிடையில், நாளை மறுதினம் முதல், மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது.
* ஆனால், எந்த முடிவும் தெரியாமல், தனித்தேர்வர்கள் உள்ளனர். மாணவர்கள் மத்தியில், அரசு பாகுபாடு காட்டுவதாக உள்ளது. என் மகன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி, அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை.


*எனவே, தனி தேர்வர்களுக்கான முடிவு அறிவிக்கும் வரை, மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட வேண்டும். தனி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


*மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மேல்நிலை பள்ளி வகுப்புகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள் எப்போது துவங்கப்பட உள்ளது என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையை, வரும், 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post