Latest Kalvi News : B.E Final Year மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு!
பி.இ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு, இந்த மாத இறுதியில் நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது: இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் படிப்பினை நிறைவு செய்ய ஏதுவாக இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் தேர்வு நடத்த இருக்கிறது. கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறைவான கல்லூரி வேலை நாட்களின் காரணமாக பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க இயலவில்லை. ஆகையால் ஒவ்வொரு பாடத்திலும் 5 பகுதிகள் மட்டுமே இறுதி தேர்விற்கு சேர்க்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படடையிலேயே தேர்வுகள் நடத்தப்படும். உள்மதிப்பீடு மற்றும் புராஜெக்ட் பணிகளுக்கு 70% மற்றும் ஆன்லைன் தேர்விற்கு 30% வெயிட்டேஜ் கொடுக்கப்படவிருகிறது. இதன் மூலம் மாணவர்கள் எளிதாக தேர்வை எதிர்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Post a Comment