
ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்,
முதலாவதாக, TNTP இணையதளத்திற்கு தொடர்ச்சியாக தங்களது பங்களிப்பை வழங்கிவரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கற்றல் கற்பித்தல் வளங்களை மிக அதிக அளவில் நமது தமிழ்நாடு ஆசிரியர் முகமைக்கு பங்களித்து வருகின்றனர், அவ்வாறு பங்களிக்கப்படும் வளங்களின் தரத்தை உறுதி செய்யது, அவை நமது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த முறையில் பயன்படும் நோக்கில் பங்களிப்பு வளங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு விளக்கமாக Contribute Menu - வில் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளை தவறாது பின்பற்றி கற்றல் வளங்கள் குறைவாக உள்ள அல்லது தேவைப்படும் பாடங்களை ஆய்ந்து அறிந்து சுவாரசியம் மிக்க தரமான எளிதில் பாட கருத்துக்கள் புரியும் வகையிலான கற்றல் கற்பித்தல் இயங்குறு வளங்களை தயாரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஏதேனும் ஐயம் இருப்பின் tntplms@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
tntp.tnschools.gov.in, TNTP IN EMIS APP, TNTP NEW USER ID PASSWORD, TNTP LOGIN, TNTP IN EMIS APP,
Post a Comment