Title of the document
*இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியத்திற்கு (personal pay RS.2000/-) அகவிலைப்படி வழங்க வேண்டி கோரிக்கை*

         தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு அரசாணை எண்: 234  FINANCE (PAY CELL) DEPARTMENT
நாள்:01.06.2009 அரசாணையின் மூலம், 2009ல் முன் தேதியிட்டு 01.01.2006
முதல் ( 6th  PAY COMMISSION)  புதிய ஊதிய விகித மாற்றம்-2009ஐ தமிழக
அரசு நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் 10 இலட்சத்திற்கும் மேலான‌  அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஊதிய விகித மாற்றத்தை பெற்றனர்.

இதன் தொடர்ச்சியாக அரசாணை எண்: 23 நிதி(ஊதியப் பிரிவு)த் துறை நாள்:
12.01.2011 அரசாணையின் மூலம், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவிகளுக்கு,  01.01.2011 முதல்  PERSONAL
PAYவாக‌ (தனி ஊதியம்) ரூ.750/-  வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி ஊதியமானது
ஆண்டு ஊதிய உயர்வுக்கும்,  அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்திற்கும்
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும் அரசு கடித எண்:8764/CMPC/2012-1/ நாள்: 18.04.2012ன் மூலம்,
பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து புதிய ஊதியம் நிர்ணயம்
செய்யப்பட்டது. அப்பொழுதும் தனி ஊதியமானது தனி ஊதியம் என்ற கலத்தில்
தனியாக தான் வைத்தார்கள். இந்த தனி ஊதியமானது தனியாக வைத்திருந்தாலும்,
இடைநிலை ஆசிரியர்களின் அனைத்து பணப்பலன்களுக்கும் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்பட்டது.

2017ல் அரசாணை எண்: 303 FINANCE (PAY CELL) DEPARTMENT   நாள்
:11.10.2017 இன் படி 01.10.2017 முதல் புதிய ஊதிய விகித மாற்றத்தை தமிழக
அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தியது. இதன்
மூலம் 12 இலட்சத்திற்கு மேலான‌  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
புதிய ஊதிய விகித மாற்றத்தை பெற்றனர்.  இதில் இடைநிலை ஆசிரியர்கள்
மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவிகளுக்கு, புதிய ஊதிய
விகித மாற்றம் 2017  ( 7th  PAY COMMISSION) இன் மூலம் 01.10.2017 முதல்
அரசாணை எண்: 303 FINANCE (PAY CELL) DEPARTMENT நாள்:11.10.2017 இன் படி
தனி ஊதியம் (PERSONAL PAY) ரூ.2000/- ஆக‌ உயர்த்தி வழங்கப்பட்டு
வருகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு  01.10.2017 முதல் வழங்கப்படும்
ரூ.2000/- ஆனது, PERSONAL PAY (தனி ஊதியம்) தான் என்று தெளிவாக
அரசாணையில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அகவிலைப்படிக்கும்,
ஓய்வூதியத்திற்கும், கணக்கில் எடுத்துக் கொள்ள கருவூல அலுவலர்கள்
மறுக்கிறார்கள். மேலும் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன்
சேர்த்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்யும் கணக்கீட்டிற்கும் கருவூல
அலுவலர்கள் மறுக்கிறார்கள். சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண்
செய்யும் பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
மாதாந்திர ஊதியம் வழங்க பயன்படுத்தப்பட்டு வரும் சாப்ட்வேரான
ATBPS/Webpayroll (Epay roll)-லிலும், தற்போது புதியதாக
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள IFHRMS-லிலும் ஆகிய இரண்டு சாப்ட்வேரிலும் தனி
ஊதியமானது (Personal Pay) அகவிலைப் படிக்கும், ஈட்டிய விடுப்பு
கணக்கீட்டிற்கும் எடுத்து கொள்ளும் வகையில் தான் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அப்படி இருக்கையில் அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்திற்கும் கணக்கில்
எடுத்துக் கொள்ளவும், பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து
புதிய ஊதியம் நிர்ணயம் செய்யவும் கருவூல அலுவலர்க‌ள் மறுக்கிறார்கள்.
2011 முதல் ரூ.750/- தனி ஊதியத்திற்கு அனைத்து பணப்பலன்களும்
வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 01.10.2017 முதல் வழங்கப்படும் ரூ.2000/-
(PERSONAL PAY) தனி ஊதியத்திற்கு மேலே கூறியுள்ள பணப்பலன்களை
வழங்குவதில்லை.

ஆகவே இந்த தனி ஊதியத்தை அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்திற்கும், ஈட்டிய
விடுப்பு சரண் செய்யும் பொழுதும் கணக்கில் எடுத்துக் கொள்ள
வேண்டுமென்றும், மேலும் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன்
சேர்த்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்யும் கணக்கீட்டிற்கும் எடுத்துக்
கொள்ள வேண்டுமென்றும், அனைத்து கருவூல அலுவலர்களுக்கும் மற்றும் ஊதியம்
வழங்கும் அலுவலர்களுக்கும், தமிழக அரசின் நிதித் துறையால் ஆணையிட
வேண்டுமென்று தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் பகிர்வு

அ.ஜெயப்பிரகாஷ்
அரூர் ஒன்றியம்,
தருமபுரி மாவட்டம் 

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டி அனுப்பிய கோரிக்கை மனு
👇👇👇👇👇👇

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post