Title of the document
#அசத்தும்_அரசுப்_பள்ளி_ஆசிரியர்கள் #A3_குழு 

அரசுப் பள்ளி என்றாலே சரியில்லை என்ற பொதுப் புத்தியை உடைக்கும் கடமை ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு. 


பல நடைமுறைச் சிக்கல்களைக் கடந்து ஒரு அரசு / அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் தனது மாணவர்களை வெற்றியாளராக உருவாக்க , பள்ளியை சிறந்த வகையில் இயக்க அப்பள்ளி ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் எவ்வித செயல்களை மேற்கொள்கின்றனர் என்பதை  விளம்பரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நமது A3 குழுவில் நேற்றிலிருந்து தினம் ஒரு ஆசிரியர் தங்கள் பணிகளைக் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்  .

குறைந்த பட்சம் மக்களிடையே அரசுப் பள்ளிகள் குறித்து நன்மதிப்பை உருவாக்கவும் , உண்மையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் -ஆசிரியர் உறவு நிலை என்ன , இரண்டாம் பெற்றோராக இயங்கும் ஆசிரியது அர்ப்பணிப்பு , கூட்டு முயற்சி இனவ பற்றி அறிந்து கொள்ள இந்த முன்னெடுப்பு .

இயங்கிக் கொண்டே தங்கள் பள்ளிகளை உலகறியச் செய்யும் ஆசிரியர்கள் , தனது மாணவர்களை  உலகறிய , நாடறிய முயற்சி செய்யும் ஆசிரியர் , மாணவர் நலன் சார்ந்து இயங்கும் ஆசிரியர் என தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் நல்லுள்ளங்களை இங்கு சந்திக்கலாம்.  

நாளை காலை .......


இளம் விஞ்ஞானி மாணவர்களை மலரச் செய்து விருதுகளைக் குவிக்கும் பள்ளி ,
 பன்முகத் திறன் வளர்க்கும் பள்ளி , அறிவியலில் அசத்தும் பள்ளி , பேச்சாற்றலில் மாணவர் உச்சம் தொட வைத்த பள்ளி என பல தளங்களில் நாளை நம்முடன் பேசவிருக்கிறார் அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன்

(ஜூன் மாத ஆரம்பம் முதல் SFI முகநூல் பக்கத்தில் இப்பணியை ஒருங்கிணைக்க உதவி வந்தேன் . 20 நாட்கள் ஆசிரியர்களை ஒருங்கிணைப்பு செய்தேன். சில காரணங்களால் 
தற்போது  நமது  குழுவின் முகநூல் பக்கத்திலேயே தொடர ஆரம்பித்துள்ளோம். )
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post