Title of the document

சென்ற வாரத்தில் ஒரு நாள் வீட்டின் அழைப்பு மணி அழைத்திட ,வெளியில் சென்று பார்த்ததில் இன்ப அதிர்ச்சி. நமது ஜீவனுள்ள சந்திப்பு அமைப்பின் குழந்தைகள் நான்கைந்து பேர் நின்றிருந்தனர். மேல்சட்டை இன்றி கலைந்த தலையும் ,அழுக்கேறிய சற்றே இளைத்த உடலுமாக காணப்பட்டனர். ஆனால் கண்களில் மட்டும் அதே ஜீவனுடனான அன்பு....

  "எப்படி மிஸ் இருக்கீங்க....உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தோம்" என
சிரிக்கும் கண்களுடன்பேசும் அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு ,

"ஏன் மாஸ் கனியவில்லை மாஸ்க் அணிந்துக் கொண்டு தானே வெளியில் வரவேண்டும் ?"என்றேன்.


"மாஸ்க் இல்ல ..."வெகுளித்தனமான அதே அழகுசிரிப்புடன்..

"எல்லாரும் சாப்டீங்களா..என்ன சாப்டீங்க?".

"சாப்பிட்டோம் மிஸ்...காலையிலே அம்மா கஞ்சி குடுத்துட்டு 100 நாள் வேலைக்கு போயிடுச்சு..."

அவர்கள் சென்ற பிறகு மனதிற்குள் என்னவோ பிசைந்தது.

பின்தங்கிய பொருளாதாரச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு #பள்ளி_என்பது_வெறும்_கல்விகற்கும் #இடங்கள்_மட்டுமல்ல அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் இடங்க ளாகவும் இருக்கிறது. அப்படி யிருக்க கடந்த மூன்று மாதங்களாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு பள்ளி முடக்கப்பட்டு உள்ளதால் சாதாரண நாட்களில் தினமும்பலவித உணவுகள் ,முட்டை என வழங்கப்பட்டு வந்த குழந்தைகள் இன்று ஒரு வேளை கூட சத்தான உணவு கிடைக்காத சூழலில் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது.


                                     கொரனோ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் ஊட்டச்சத்து குறைபாடால் இந்தக் குழந்தைகள் வைரசுக்கு நிச்சயம் எளிய இலக்காக மாற நிறைய வாய்ப்புள்ளது.

                       தற்போது இங்கு லாக்டவுன் இல்லை என்றாலும் வீட்டு வேலை, கூலி வேலை செய்துவரும் இவர்களின் பெற்றோர்களை அச்சத்தின் காரணமாக யாரும் வேலைக்கு அனுமதிப்பதில்லை  இதனால் இவர்களது  வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

                  பெற்றோர்கள் வேலையின்றி தவிக்கும் சூழலில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தான உணவை வழங்குவது எப்படி சாத்தியமாகும்? ஆனால் உலக சுகாதார நிறுவனம் கொரனோ பரவும் இந்த காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் புரதம் நிறைந்த உணவை வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை அரசாங்கம் கவனத்தில் ஏற்று குழந்தைகளுக்கான ஊட்டச் சத்தைஉறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து பலர் குரல் கொடுத்து வருகிறோம்.
                இவை பற்றிய சிந்தனையிலே இரண்டு நாட்களாக மனம் நிலைத்திட, இணையரிடம் பேசினேன் .பள்ளிகள் திறக்கும் வரை அல்லது அரசாங்கம் கவனத்தில் ஏற்கும் வரை மாதத்தில் பத்து நாட்களாவது குழந்தைகளுக்கு #புரதம்நிறைந்த_முட்டை_இரும்புச்சத்துள்ளபேரிச்சம்பழம்_பிரட்பாக்கெட்_வயது #வந்தபெண்களுக்கு_நாப்கின் வழங்கலாம் என முயற்சி செய்தோம்.

  அதன் தொடர்ச்சியாக இன்று நான் வசிக்கும் தில்லைநாயகபுரம் கிராம பகுதியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி குழந்தைகளு க்கு  முட்டை ,பேரிச்சம்பழம், பிரட் பாக்கெட் ,நாப்கின் வழங்கப்பட்டதில் மனதின் எங்கோ ஒரு மூலையில் இருந்த சிறு உறுத்தல் நீங்கியது. 

                                 #சமூக_இடைவெளி யை பின்பற்றி குழந்தைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்ததுடன் அனைத்து குழந்தைகளுக்கும் மாஸ்க் வழங்கிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அவர்களுக்கும் ,உறுதுணையாக நின்ற இணையருக்கும் எங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்த சமூக சேவகர் திரு.ரங்கராஜன் ஸ்ரீதர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post