Title of the document 95 43 43 43 97 - TN Police Exam 2020 - Free Coaching Class Contact : 9543434397
*💢🔴🔴🔴💢5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம்; அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு: புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்*

*♦♦5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.*

*♦♦தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1968-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது.*

*♦♦தற்போதைய புதிய கல்விக் கொள்கை 2014 தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.*

*♦♦இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவின் முழுமையான அறிக்கையை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக் குழு, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி சமர்ப்பித்தது.*

*♦♦இந்நிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.*

*♦♦உயர் கல்வித்துறைச் செயலர் அமித் கரே அதன் முக்கிய அம்சங்களைத் தெரிவித்துள்ளார்.*

*⭕⭕முக்கிய அம்சங்கள்*

*♦♦2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும்.*

 *♦♦3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும்.*

 *♦♦புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.*

*♦♦மாணவர்கள் உள்ளூர்க் கைவினைத் தொழில்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.*

*♦♦அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியாகக் கற்பிக்கப்படும்.*

*♦♦மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய மென்பொருட்கள் உருவாக்கப்படும்.*

 *♦♦6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும்.*

*♦♦12-ம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி கற்பிக்கப்படும்.*

*♦♦பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.* 

*♦♦சட்டம், மருத்துவப் படிப்புகளைத் தவிர்த்து உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த வாரியம் அமைக்கப்படும்.*

*♦♦எம்.பில். படிப்பு நிறுத்தப்படுகிறது.*

*♦♦நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படும்.* 

*♦♦கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்புக் கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.*

*♦♦தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு வைக்கப்படும். இது விருப்பத் தேர்வு மட்டுமே, கட்டாயமல்ல.*

*♦♦பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிக்கலாம்.*

*♦♦புதிய கல்விக்கொள்கை 22 மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*

➖➖➖➖
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post
KALVINEWS | KALVI NEWS | KALVISEITHI | KALVISOLAI | PALLIKALVI NEWS