Title of the document
  வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்த பள்ளிக்கல்வி ஆணையர் ஜார்ஜ் தாமஸ் தலைமையில் இறுதிகட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன ..




 முதலமைச்சருக்கு அளிக்க உள்ள பரிந்துரையை இறுதி செய்வதற்காக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் டிபிஐ வளாகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கல்வி துறை இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர் இந்த ஆலோசனையை தொடர்ந்து வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என்று நமக்கு தெரியவருகிறது ..



கொரோனா பிரச்சினை காரணமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் தற்போது வரை பள்ளிகள் திறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் உள்ளது.. இதனால் அடுத்த கல்வி ஆண்டில் கண்டிப்பாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உள்ளது ..

இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறையில் பாடத்திட்டங்கள் குறைப்பது, பள்ளிகள் திறப்பது, வகுப்பறை சூழல்களை கையால்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை இந்த குழு நமது முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கும் இது சம்பந்தமாக நமது முதலமைச்சர் அவர்கள்  அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுத்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாற்றங்களை அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post