Title of the document
ஜாக்டோ ( JACTTO - GEO ) ( Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations )  


நாள் : 06.07.2020 பெறுநர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் , தலைமைச் செயலகம் , சென்னை 600 009 . * மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு , பொருள் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மீதான 17 ( பி ) குற்றக் குறிப்பாணை - மாணாக்கர் நலன் சார்ந்து கருத்து வெளியிட்டமைக்காக பழிவாங்கும் நடவடிக்கை - கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுதல் - 17 ( பி ) குற்றக் குறிப்பாணையினை இரத்து செய்யக் கோருதல் தொடர்பாக . வணக்கம் . 2019-20ஆம் கல்வியாண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு ( விடுபட்ட பாடங்கள் ) பொதுத் தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக 9-6-2020 நாளிட்ட தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்ட அரசாணையினை விமர்சித்து தொலைக்காட்சியில் கருத்து வெளிட்டதாகத் தெரிவித்து ,


 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரும் தஞ்சாவூர் மாவட்டம் மனையேறிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு . மா . ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமான திரு . பி . பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோரின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு முறை மற்றும் மேல்முறையீடு விதி 17 ( பில் குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது . ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையினை ஜாக்டோ ஜியோ வன்மையாகக் கண்டிக்கிறது . 


மாணாக்கர்களின் நலனைக் கருத்தில் கொண்டு , சமூக அக்கறையோடு ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர் என்ற அடிப்படையில் ஆரோக்கியமான விமர்சனங்களை பதிவிட்டவர்களின்மீது தொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும் . கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள சவாலாகும் . தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசிடம் ஒருமித்த குரலில் கொண்டு சென்று தீர்வு காண்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு . ஆசிரியர் அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பானது



WISCUIT ( JACTTO - GEO ) ( Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations ) குரல் கொடுக்காமல் , சமூகத்தினை பாதிக்கின்ற பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தொடர்ந்து மக்கள் / மாணவர்கள் / இளைஞர்களுக்கு ஆதரவுக் கரத்தினை நீட்டி வருகிறது . குறிப்பாக தமிழக மாணாக்கர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ள ' நீட் ' தேர்வுக்கு எதிராகவும் , ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினைக் கைவிட வேண்டும் என்றும் , கொரோனா தொற்று நோய் பரவும் சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ஒத்தி வைத்திட வேண்டும் என்றும் தமிழக அரசினை வலியுறுத்தி வந்துள்ளது ,


நம்மை அடிமையாக்கி ஆண்டு வந்து ஆங்கிலேயர்கள் காலத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி , 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 18 ஐ மீறியதாக குற்றக் குறிப்பாணையானது இருவர் மீதும் வழங்கப்பட்டுள்ளது என்பது , தற்போதைய கால கட்டத்தில் ஏற்புடையதாகத் தெரியவில்லை . இந்த நடத்தை விதிமுறைகளை காலச் சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது . உரிமைகளை மீட்டெடுப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமானது மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று விலக்கிக் கொள்ளப்பட்டு , ஏறத்தாழ 17 மாதங்கள் கடந்த நிலையிலும் ,


JACTTO - GEO
அந்தப் போராட்டத்தின்போது 5062 நபர்கள் மீதான 17 ( பி ) குற்றக் குறிப்பாணைகள் , பணி மாறுதல்கள் , ஆண்டு ஊதிய உயர்வு , பதவி உயர்வு நிறுத்தம் , காவல் துறையால் புனையப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் ஆகியவை இன்னும் தமிழக அரசால் இரத்து செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது . இந்த நிலையில் , தற்போது சமூக நோக்கோடு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தனியொரு மனிதராக அல்லாமல் , தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் அமைப்பின் ஆயிரக் உறுப்பினர்களின் பிரதிநிதியாக விமர்சனங்களை முன்வைத்ததற்கு அவர்கள்மீது புனைய 2/3 17 ( பி ) குற்றக் குறிப்பாணை என்பது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் சாயை வகிக்கும் அமைப்பின் நிர்வாகிகளின் மீது வன்மத்துடன் தமிழக அரசு செயல்படுவதனையே சுட்டிக் காட்டுகிறது .


JACTTO - GEO
தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்பின் நிர்வாகிகள் இருவர் மீதும் புனையப்பட்டுள்ள 17 ( 1 ) குற்றச்சாட்டுகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் , 2019 ஆம் ஆண்டில் ஜனவரி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முடித்து 17 மாதங்கள் கடந்த நிலையில் 5062 நபர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட்டு , கொரோனா நோய் தொற்று காலத்தில் களத்தில் தன்னுடைய இன்னுயிரினையும் பொருட்படுத்தாது , அரசுடன் நோய் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும் ஒரு சுமூகமான நல்லுறவினை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை ஜாக்டோ ஜியோ கேட்டுக் கொள்கிறது .





# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post