Title of the document
வரிச் சலுகைகளை (Tax benefits) பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
மத்திய நேரடி வரிகள் ஆணையம் 

கடந்த 2019-20 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலில், ஜூன் 30 வரையிலான காலத்துக்கு வரிச் சலுகைகள் (Tax benefits) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரி வித்துள்ளது. 

கரோனா ஊரடங்கு காரணத் தால் வரி செலுத்துவோரின் சுமையைக் குறைக்க வரி கணக்கு தாக்கலில் புதிய சலுகையை மத்திய நேரடி வரிகள் Direct Tax ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 31 வரை முடிந்த 2019-20 நிதி ஆண்டுக் கான வரி கணக்கு தாக்கலில், வரிச் சலுகை கணக்கீட்டுக்கான காலத்தை மார்ச் 31 வரை என்பதை மாற்றி ஜூன் 30 வரை என நீட்டித்துள்ளது. 

அதாவது வரி கணக்குத் தாக்கலுக்கான காலத்தை கூடுத லாக ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை சேர்த்துள்ளது. அதன்படி, வருமான வரி Income Tax Act  சட்டத்தின் பகுதி 6-ல் உள்ள 80சி, 80டி, 80ஜி உள்ளிட்ட சலுகைகளை மார்ச் 31 வரை மட்டுமல்லாமல் ஜூன் 30 வரை கணக்கிட்டு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் 5-ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வருமான வரி வரம்புக்கு கீழே இருப்பவர்கள் ‘அதிகம் செலவு (செய்பவர்களாக இருந்தால் அவர்களும் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதாவது, வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்தாலோ, ரூ.1 கோடி வங்கியில் இருப்பு வைத்தாலோ, ரூ.1 லட்சம் மின் கட்டணமாக செலுத்தி இருந்தாலோ அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

சொத்து உரிமையாளர்களும், அதிக செலவு செய்பவர்களும் சகாஜ், சுகம் என்ற இரண்டு படிவங்கள் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். வரிக் கணக்கு Tax Calculation தாக்கல் செய் வதற்கான தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கு தாக்கல் செய் வதற்கான மென்பொருள் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post